Subscribe Us

header ads

வருடத்திற்கு இருமுறை பற்களை கிளீனிங் செய்வது நல்லதா?



வருடத்திற்கு இருமுறை பற்களை முறையான கிளீனிங் சிகிச்சை செய்வது பற்களுக்கு நல்லது. பற்களைச் சுத்தம் செய்வதால் பற்சிதைவு, பற்குழி, எனாமல் நீங்குதல் போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும். இதனால் பற்களும் சிறிது வெள்ளையாக மாறும். பற்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளையும் கிளீனிங் என்ற முறை குறைக்கும். 

கிளீனிங் செய்த சில நாட்களுக்கு, காபி, குளிர்ந்த பொருட்களைச் சாப்பிட்டால் பற்கூச்சம் ஏற்படும். இதனால் பயம் வேண்டாம். நீண்ட நாட்களாகக் காறை படிந்த பற்களில் கிளீனிங் செய்யப்பட்ட பிறகு, பற்களின் மேல் பகுதியில் (Surface) உமிழ்நீர் படும்போது கூச்ச உணர்வு ஏற்படும். பழகிய பின் பற்கூச்சம் ஏற்படுவது நின்றுவிடும் இதற்காக சென்சிட்டிவ் டூத் பேஸ்ட்கள் பயன்படுத்த நினைப்போர் பல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். 

முகத்திற்கு எப்படி ஸ்கரப்போ, அதுபோல பற்களை சுத்தப்படுத்தும் ஸ்கரப், நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் மட்டுமே. சர்க்கரை நோயாளிகள் தங்களின் பாதங்களை எப்படிக் கவனமாகப் பராமரிக்கின்றனரோ, அதுபோல, பற்களையும் முறையாகப் பராமரித்தல் அவசியம். விளம்பரங்களைப் பார்த்து பற்கள் வெள்ளையாக வேண்டும் என சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகும் பேஸ்ட்களைப் பயன்படுத்தக் கூடாது. 

அதில் பிளீச்சிங் ஏஜென்ட் (Bleeching agent) கலந்திருப்பதால், சில நாட்களிலே பற்கள் வெள்ளையாகத் தெரிந்தாலும், நாளடைவில் எனாமல் நீங்கி பற்கள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம்.   அதிகமான நேரம் பல் தேய்ப்பதாலும், அதிகமான பேஸ்ட் பயன்படுத்துவதாலும் பற்கள் வெள்ளை ஆகாது. எனாமல் மட்டுமே நீங்கும். 3-5 நிமிடங்கள் வரை பல் தேய்த்தாலே போதும்.   

ஒரு நாளைக்கு இருமுறை பல் தேய்ப்பதுடன், அதற்குப் பயன்படுத்தும் பேஸ்ட்டின் அளவு, மிளகு அளவில் இருந்தாலே போதும்.

Post a Comment

0 Comments