புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்டல்குழி கிராமத்தில் வசிக்கும் மௌலவி ஹபீப் ஜவாத் கான் (ரஹ்மானி) வயது 50, அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் வாய்ப்பட்டுள்ளார்.
குருநாகல் மற்றும் கண்டி அரசாங்க மருத்துவமனைகளில் இவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூடிய விரைவில் சிறுநீரக சத்திர சிகிச்சை மேட்கொள்ளுமாறு கூறியுள்ளதோடு கண்டி மருத்தவ மனைச்சேர்ந்த வைத்தியர் வாசிக் இந்த சத்திர சிகிச்சைக்காக 20 இலட்சம் ரூபா தேவைப்படுமென கூறியுள்ளார்.
கெகுனுகொல்ல, இப்பாகமுவையில் திருமணமாகி தற்பொழுது குடும்ப சகிதம் கண்டல்குழியில் வசித்துவரும் இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்மாரும் உள்ளனர். அக்குரனை, அரக்கியால, முதலைப்பாளி ஆகிய மதரசாக்களில் கல்வி பயின்ருவருகின்ர இவர்களுக்கான கல்விச் செலவுகளையும் இவர் செலுத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றார்.
இந்நிலையில் இவரது மருத்துவ செலவுகளுக்கான உதவிகளை தாராள மனம் படைத்த எவரும் வழங்கி உதவுமாறு கண்டல்குழி மஸ்ஜிதுல் பாலாஹ் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மௌலவி கபீர் லெப்பை (காசிமி) வேண்டுகோள் விடுக்கின்றார்.
உதவிகளை நேரடியாகவோ அல்லது அவரது வங்கி கணக்கில் வைப்பிலிடுவதன் மூலமோ வழங்குமாறும் அவர் கேட்டுக்கொள்கின்றார்.-Puttalam Online-
வங்கி கணக்கு:
பெயர் : Mou. Habeeb Jawath Khan
வங்கி : People’s Bank – Kalpitiya Branch
கணக்கு இல. : 125200123117923
வங்கி : People’s Bank – Kalpitiya Branch
கணக்கு இல. : 125200123117923
அல்லா எம் அனைவரது நல்லமல்களையும் ஏற்றுக்கொள்வானாக!
தகவல் – அபூ உஸாமா.


0 Comments