கோட்டாபய ராஜபக்ஸ இந்த வாரம் நான்கு நாட்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
அவரது பேஸ்புக் தளத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போது அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தொடர்ந்து நாளையதினம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினாலும், நாளை மறுதினம் குற்றப் புலனாய்வு பிரிவினராலும் விசாரிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை அவர் மீண்டும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


0 Comments