பெண்கள் அழுவதற்கென்றே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிட்சுயி கார்டன் யோட்சுயா ஹோட்டல் தனி அறைகளை வாடகைக்கு விடுகின்றது.
குடும்பப் பிரச்சனை, காதல் தோல்வி, உறவினர் பிரிவு, பெற்றோர் மறைவு, வேலை அழுத்தத்தினால் ஏற்படும் வெறுப்பு உள்ளிட்ட பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறைகளை முன்பதிவு செய்துவிட்டு தனியாக வரும் சில பெண்கள் மூடிய கதவுக்குள் தனிமையில் அமர்ந்து வாய்விட்டும், மனம்விட்டும் அழுதுவிட்டு போகின்றனர்.
கண்ணீர் வராதவர்களுக்கும் அருவியாக கண்ணீரை சுரக்க வைக்கும் சாதனங்களும் இந்த அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. மிகுந்த சோகத்தை வரவழைக்கக்கூடிய கார்ட்டூன் மற்றும் சினிமா படங்களையும் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments