பர்மா றோகினிய முஸ்லிம்களுக்காகப் பிராத்திப்போம்
(எம்.எம்.ஜபீர்-0775051228)
பர்மாவில் றோகினிய முஸ்லிம்களுக்கு எதிராக இன்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள முஸ்லிம் இன சுத்திகரிப்புக்கு எதிராக முழு முஸ்லிம் சமூகமும் போராட வேண்டிய காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இக்கால கட்டத்தில் அரபு உலக நாடுகளும், சர்வதேச நாடுகளும்இ ஐக்கிய நாடுகளும் சபையின் மனித உரிமை ஆணையகமும் ஏனைய முஸ்லிம் நாடுகளும், மலாலா போன்ற பெண்மணிக்கு நோபல் பரிசு வழங்கிய நாடுகளும் மிகவும் மௌனியாக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் மீண்டும் ஒரு பர்மாவாக இலங்கையைப் பார்க்க இருந்த சந்தர்ப்பத்தை தடுப்பதற்காக மிகவும் மானசிகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்க்கதரிசனமான முடிவுடன் நல்லாட்சியை ஏட்படுத்தி இலங்கையை மீண்டும் ஒரு சுபீட்சமான நாடாகமாற்றியவாறு அல்லாஹுத்தாலா மீண்டும் பர்மா மக்களுக்கும் அச்சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் என இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றினந்து பிராத்திப்போம்.


0 Comments