Subscribe Us

header ads

பேதங்கள் மறந்து இனத்தின் பால் ஒன்றிணைய அழைக்கிறேன்.


இலங்கையில் தற்போது மிக வேகமாக பரவிவரும் இனத்துவச அடக்குமுறை சில நாட்களாக சூடுபிடித்துள்ளது மன வேதனை தரக்கூடியதாக உள்ளது.வட மாகாணத்தில் தற்போது சூடுபிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் மரிச்சுகட்டி,,பாலைகுழி,கரடிகுழி மக்கள் பிரச்சினையானது எதிர்காலத்தில்  முஸ்லிம் மக்களின் வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைக்க எடுத்திருக்கும் ஆரம்ப கட்டமே தவிர வேறு ஏதுமில்லை. 

இந்த பிரச்சினைக்கு  இலங்கை தாய் நாட்டில் பாராளுமன்றதிலும் ,மாகாண  சபைகளிலும் அங்கம் வகிக்கும் சகல  மக்கள் பிரதிநிதிகளும்  ஒன்றாக இணைந்து இஸ்லாம் போதிக்கும் ஒற்றுமையை இவ்விடயதிலாவது எடுத்து நடக்க முன்வருமாறு சகலருக்கும் இந்த வேளையில் பகிரங்க அழைப்பு விடுக்கிறேன். இந்த பிரச்சினையை  ஒரு சில அரசியல்  தலைவர்களின் பிரச்சினையாக அடையாளப்படுத்தி  சிங்கள ஊடகங்கள்  பேரினவாத சக்திகளை ஒன்றிணைத்து வரும் இவ்வேளையில் முஸ்லிம் தலைவர்கள்  இந்த விடயத்திலும் வங்கரோத்து அரசியல் செய்ய முனைவது  வரலாற்று தவறு என்பதை உணர கடமை பட்டுள்ளீர்கள்.

இந்த வில்பத்து பிரச்சினையில் பசில்,சம்பிக்க,லால்காந் போன்ற  சிங்கள சகோதர மக்கள் பிரதிநிதிகள் வாய்திறந்து உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியும்  மௌனம் சாதித்து வரும்  மா.ச.உ ஆசாத் சாலி தலைமையிலான  நுஆ ,அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், மு.அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ், போன்ற கட்சிகளின் தலைமைகளும்,மக்கள் பிரதிநிதிகளும் மட்டும் ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் மக்கள் தலைவர்களும் தமது ராஜ மௌனத்தை களைந்து முஸ்லிம் மக்களின் இந்த சமுக உரிமைகளுக்காகவும், வில்பத்து ,மரிசுகட்டி மக்களின் வாழ்வியளுக்காகவும் குரல் கொடுக்க முன்வருமாறு சகல முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்த மடல் ஊ டாக அழைப்பு விடுக்கிறேன் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி சார்பில் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் அல் -ஹாஜ் ஹுதா உமர் அழைப்பு விடுத்துள்ளார்.


Post a Comment

0 Comments