மண்ணோடு மக்கி
புழுவோடு உறவாடும்
மனித குலம்
செய்யும் வேலையா இது
மியன்மார் முஸ்லிம்களுக்கு
நரகத்தை தூரமாக்க
சஹிது அந்தஸ்தை
அள்ளிக்கொடுக்கும் -அன்பாளா !!!!!
அவர்கள் உனக்கு
செய்தது என்ன????
நேற்றுப் பிறந்த குழந்தை
தொப்புல்கொடியோடு
கழுத்தும் அறுந்து தொங்குது......
அது -உனக்கு செய்தது என்ன?????
வரிக்குதிரைகளும் தோற்று
நிக்கிது -பர்மாவில்......
என்னண்ணனின் தோல்மீது
இருக்கும் வரிகள் கண்டு........
மண்டை ஓடுகளை ,
மூளைகளை ,
கருவிழிகளை ,
சிதைத்து எரிந்திருக்கிறாய்......
சிதைந்து போனது
அவர்கள் மட்டுமல்ல
போதிமரத்தடியில்
போதித்த போதனைகளும் தான்.......
தூய புத்தன்
கண்ணீர் விடுவார்- உன்
கொடும் செயல் கண்டு.......
ஊடகங்கள் ஊமையாகி ,
அராபிய தேசமும் செவிடாகி,
செத்துமடியும் என் உறவுகளே..........
ஒரு நாள் விடியும்- அன்று
உன் தொல்லைக்கும் முடியும்
அல்லாஹு அக்பர்............
படைத்தவன்,
பரிபாலிப்பவன்,
இப்பாரை ஆள்பவன்,
அவன் தருவான்.........
திமிர்கள் அடங்கும்
தனாவட்டுக்கள் ஒடுங்கும்
அவன் காப்பான்,
அல்லாஹு அஹ்லம்..........
தைரியமாக இரு
இந்த உலகில் எங்கோ
ஒரு மூலையில்
மனிதாபிமானம்
ஒளிந்து கிடக்கலாம்.......
போராளிகள் கிளம்பி விட்டனர்
நமது பாலஸ்தின சகோதரனையும்
பாதுகாக்க -போராடிய கூட்டமிது..........
அவர்கள் வெட்டிய
ஒவ்வொரு வெட்டுக்கும்
பதில் தருவர்........
வேங்கை கொண்ட போராளிகள்
விடமாட்டர் -விடிவோ
அல்லது -முடிவோ தெரியாமல்.........
தைரியமாக இரு
அல்லாஹ்வின் துணை
கொண்டு - அந்த படை
உன்னைச்சேரும் .......
தைரியமாக இரு
அந்த படை
உன்னைச்சேரும் .......
# இவன்
உனக்காக அழும்
கண்களில் ஒன்றுக்கு
சொந்தக்காரன்
-ஹுதா உமர் -


0 Comments