மகிந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட வரையறையற்ற கடன்கள் காரணமாக நாட்டின் முழு கடன் தொகை 8 ஆயிரத்து 999 பில்லியனாக அதிகரித்துள்ளது.
நிதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டில் ஆயிரத்து 784 பில்லியன் ரூபாவாகவே இந்த கடன்தொகை காணப்பட்டது.
எனினும் கடந்த 10 வருடங்களில் 7 ஆயிரத்து 215 பில்லியன் கடன்தொகை கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரச வங்கிகளின் செயற்பாடுகளை தனியார் மயப்படுத்த திட்டமிட்டு வரப்படுவதாக தெரிவிக்கும் கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் மூடப்பட்ட பிரமுக வங்கியின் 8 ஆயிரத்து 200 வைப்பீட்டாளர்களின் வைப்பீட்டு நிதியை மீள கையளிக்கும் முதல் கட்ட நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் அதிகமான காலங்கள் தாமதமடைந்து வந்த குறித்த நிதி வழங்கல் நடவடிக்கைகள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments