சீனாவில் தயாரிக்கப்படும் துருப்பிடிக்காத மூங்கில் சைக்கிள்கள் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.
காற்று மாசுபாட்டை தடுக்கும் விதமாக உலக நாடுகள் புவி நாளை கடைபிடித்து வரும் நிலையில், மூங்கில் சைக்கிள்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மூங்கில் சைக்கிள்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. சாதாரண சைக்கிள் தயாரிப்பிற்கு செலவிட வேண்டிய நேரத்தைவிட கொஞ்சம் கூடுதல் நேரம் இதற்கு செலவிடப் படுகிறது.
இதன் தயாரிப்பு சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது. தரமான மூங்கில் கம்புகள், சரியான அளவில் சைக்கிளின் சட்டங்களாக பொருத்துவதற்கு ஏற்ற வகையில் அவை வடிவமைக்கப்படுகிறது.
சைக்கிள் சட்டங்களை வாடிக்கையாளரே தயாரிப்பதற்கும், தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.



0 Comments