Subscribe Us

header ads

தீவகத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மாணவியின் படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டனப் போராட்டம். ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் பங்கேற்பு

-Farook Sihan-


தீவகத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மாணவியின் படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டனப் போராட்டம். ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் பங்கேற்பு 

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்;ட மாணவியின் படுகொலையைக் கண்டித்து தீவகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கதவடைப்பும், விழிப்புணர்வு போராட்டமும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

தீவகத்தின் வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, காரைநகர் ஆகிய பகுதிகளில் இக் கண்டனப் போராட்டம் இன்றைய தினம் கொட்டும் மழையிலும் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, காரைநகர் ஆகிய பிரதேசங்களின் நகர்ப்பகுதிகளில் ஒன்றுகூடிய மாணவர்கள் “நீதியான விசாரணை வேண்டும், கொலையாளிகள் இனம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய  சுலோக அட்டைகளை தாங்கியவாறு படுகொலையைக் கண்டித்து உரத்து குரல் எழுப்பினர்.

மாணவியின் படுகொலையை கண்டித்து தீவகத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்த அதேவேளை, அரச மற்றும் தனியார் பேருந்துகளினது சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. 

இதனிடையே படுகொலை செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவி செல்வி சிவலோகநாதன் வித்தியாவின் பூதவுடல் அவர் கல்வி கற்ற புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு கண்டனக் கூட்டமும் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெற்றதை அடுத்து பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இக்கண்டனப் பேரணியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.










Post a Comment

0 Comments