Subscribe Us

header ads

மருத்துவ ஆய்வுக்காக உடலை தானமளித்த மாவீரர்: விருப்பத்தை நிறைவேற்றிய குடும்பத்தார்



1971 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போர் மூண்டபோது, தனது பெற்றோரிடம் பேசிய விமானப்படை விமானியான எஸ்.டி. மாரியப்பன், நான் மீண்டும் வீட்டுக்கு திரும்பாமல் போகலாம் அல்லது தனது உடல் எங்காவது விமான விபத்தில் சிதைந்து கிடக்கலாம் என்று கூறிச்சென்றார். ஆனால் போரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வீடு திரும்பினார் லெப்டினன்ட் மாரியப்பன்.

அதன்பின் தனது மறைவுக்கு பின்னும் நாட்டுக்கு சேவை செய்யும் வகையில், தான் இறந்தவுடன் மருத்துவ ஆய்வுக்காக தனது உடலை தானமாக வழங்கவேண்டும் உறுதிபட கூறினார். குடும்பத்தாரும் அவரது விருப்பத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த மே 12-ந் தேதி தனது 82வது வயதில் மாவீரர் மாரியப்பன் மரணத்தை தழுவினார். தலைநகர் சென்னையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலில் இந்தியாவின் மூவர்ண கொடி போர்த்தப்பட்டது. இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மாரியப்பனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

அதை தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் குழுவினர் மாவீரர் மாரியப்பனின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கொண்டு வந்த படிவங்களில், தனது கணவரின் விருப்பப்படி மனைவி சந்திரா மாரியப்பன் உடலை தானமாக வழங்குவதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார். 

இது குறித்து மருத்துவரும், மாரியப்பன் அவர்களின் மகளுமாகிய மஞ்சு ஞானசேகரன் கூறுகையில், உளவியல் ரீதியாக எங்களுக்கு கொஞ்சம் சங்கடம் இருக்கத்தான் செய்தது. எனினும் தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடிவெடுத்தோம். குறிப்பாக எனது தாய் இம்முடிவில் உறுதியாக இருந்தார் என்று கூறினார்.

மரணத்தில் கூட மனித உடலுக்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் என்பது எனது பெற்றோரின் நம்பிக்கை என்று மஞ்சு கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments