பள்ளிகள், மருத்துவமனைகள் உட்பட பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்க வகை செய்யும் சட்டத்திற்கு நெதர்லாந்து அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் புர்கா எனபடும் முகத்தை மூடும் பார்க்க அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு 405 யுரோ அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி பிரதம மந்திரி மார்க் ருட்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் “சில குறிப்பிட்ட இடங்களில் மக்களின் முகங்களை பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் கண்டிப்பாக இது மத சுதந்திரத்தை பறிக்கும் செயல் அல்ல” என தெரிவித்துள்ளார்.


0 Comments