குடியிருப்பில் நாய்களுக்கு அனுமதி மறுத்ததால் பெண் ஒருவர் 4 மாதங்களாக காரிலேயே வசித்து வருகிறார்.
ஐரோப்பாவில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 8 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியவர் ஹிலாரி பாரோஸ்.
இவர் கடந்த ஜனவரி மாதம் வேலை தேடி இங்கிலாந்தின் கென்ட் நகருக்கு சென்றுள்ளார். அங்கு வேலை கிடைக்காததால் அவரது கையில் இருந்த பணம் முழுவதும் செலவானது. இதனால் அவருக்கு தங்க இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவசரகால விடுதி அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு வளர்ப்பு பிராணிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் தனது நாய்களுடன் தனியார் நிறுவனத்தின் கார் நிறுத்திவைக்கும் இடத்தில் தனக்கு சொந்தமான காரிலேயே வசித்து வருகிறார்.
இது பற்றி அவர் கூறுகையில், இங்கிலாந்திற்கு வரும்போது எனது கையில் பணம் இருந்தது. ஆனால், வீடு எடுத்து தங்கியதால் அனைத்தும் செலவாகி விட்டது. அவசர கால தங்கும் விடுதியில் எனது நாய்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எனது காரிலேயே வசித்து வருகிறேன்.
மேலும் நான் காரில் வசிப்பதால் எனக்கு வேலை தருவதற்கு யாரும் தயாராக இல்லை. எனினும் நான் எனது நாய்கள் ரோப்பீ(Robbie) மற்றும் க்ளியோவை (Cleo) விட்டு தனியாக வசிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோ ஃபண்ட் மீ என்ற பெயரில் இவர் ஆரம்பித்துள்ள முகாமிற்கு ஏராளமானோர் நிதி அளித்துள்ளனர். இதனால் சில வாரங்களில் வீட்டில் தங்குவதற்கான பணம் கிடைத்து விடும் என அவர் கூறியுள்ளார்


0 Comments