Subscribe Us

header ads

பசியற்ற உளநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சை செலவுக்கு நிதி குவிகின்றது



பசியற்ற உளநோய் (அனோரெக்சியா நெர்வோஸா) எனப்படும் உண்ணல் குறைபாடு நோயால் சுமார் 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு, மரணத்தை தழுவும் நிலையில் உள்ள 37 வயது பெண்ணுக்கு சிகிச்சை நிதியாக பல்லாயிரம் டாலர்கள் குவிந்து வருகின்றன. 

தற்போது வெறும் 40 பவுண்டுகள் எடையுள்ள ரச்சேல் பாரோக், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக, ரத்தம் சுண்டிப்போதல், நுரையீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். பசியின்மையால் ஏற்படும் உண்ணல் குறைபாடு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ள இவர், சமீபத்தில் ‘யூடியூப்’ மூலமாக இரக்க மனம் கொண்டவர்களிடம் தனது சிகிச்சை செலவுக்கு நிதி அளித்து உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

எனது கடைசிக் காலம் நெருங்கிவிட்டது என்பது எனக்கு தெரியும். எனினும், அனோரெக்சியா நெர்வோஸா எனப்படும் உண்ணல் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு கவனிப்பார் இல்லாமல் இருக்கும் என்னைப்போன்ற பலருக்கு நன்மை செய்யவே இந்த பிரசாரத்தில் நான் ஈடுபட்டுள்ளேன் என்று கூறுகிறார், ரச்சேல் பாரோக். 

இதனையேற்று, நல்லெண்ணம் கொண்ட சில கொடையாளர்கள் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments