தென் ஆப்கானிஸ்தானிலுள்ள பொலிஸ் தலைமையகமொன்றின் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதலை நடத்திய தலிபான் தீவிரவாதிகள்இ 20 க்கு மேற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கொன்றுள்ளனர்.
ஹெல்மண்ட் மாகாணத்திலுள்ள 3 பிரதேசங்களில் பாதுகாப்பு உத்தியோகத் தர்களுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்குமிடையே தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிராந்தியத்திலுள்ள 3 இராணுவ சோதனைச்சாவடிகளை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள் மாவட்ட தலைமையகங்களை சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்படி தாக்குதல்களில் பலியானவர் களில் 13 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 7 இராணுவ உத்தியோகத்தர்களும் உள்ள டங்குகின்றனர்.


0 Comments