Subscribe Us

header ads

ரிசாத் பதியுதீனினால் குடியேற்றப்பட்டு வரும் முஸ்லிம்களால் 20 மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டுள்ளதாம் -குமுது வீரரத்ன

தமிழில்:- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-


வில்பத்து பிரதேசத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் குடியேற்றப்பட்டு வரும் முஸ்லிம் மக்களால் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஜீவராசிகள் பாதுகாப்பு நிலையம் ஒன்றின் பணிப்பாளரான குமுது வீரரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (25) வெளியான “சிலோன் டுடே“ ஆங்கில பத்திரிகையில் இந்தச் செய்தி முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விலபத்து, கல்லாறு பகுதிகளில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் குடியேற்றப்பட்டவர்களாலேயே இந்த காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளன. அங்கு குடியேறியுள்ளவர்கள் யானைகள் வாழக் கூடிய சூழ்நிலைகளில் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டவர்கள் அல்லர்.

இவர்கள் இவ்வாறு செய்வதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தங்களுக்கு பின்னணியில் உள்ளார் என்ற துணிச்சலே காரணம். மறிச்சிக்கட்டியில் குடும்பங்கள் வாழ்ந்தன என்பது உண்மைதான் ஆனால், இப்போது குடியேற்றப்படுபவர்கள் அவர்கள் அல்லர். வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

காடழிப்பையும் மீள்குடியேற்றத்தையும் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டும் நீர், மின்சாரம் போன்றன மீள்குடியேற்றக்காரர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments