கிறித்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட பிரேசில் நாட்டில் இஸ்லாமியர்கள் குறைந்த அளவில் வாழ்ந்து வருகிறார்கள், சுமார் 15 லட்சம் முஸ்லிம்கள் பிரேசிலில் வாழ்கிறார்கள்.
பிரேசிலில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களும் 80 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
தமது நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு எந்தவித இன்னல்களும் வராமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் நாம் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும்,
அதற்கு அடையாளமாக ஒவ்வொரு வருடமும் மே 2 ஆம் தேதியை இஸ்லாமிய தினமாக பிரேசில் நாடு அறிவித்துள்ளது.
அந்த வகையில் இந்த மாதம் 2 ஆம் தேதி பிரேசில் பாராளுமன்றத்தில் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளையும், இஸ்லாமிய பிரச்சாரகர்களையும் அழைத்து கௌரவித்து பாராட்டு பத்திரங்களும் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய மார்க்க அறிஞர்கள்...
பிரேஸில் நாட்டிற்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பு பழமையானது என்றும் பிரேஸிலை கட்டியமைத்ததில் முஸ்லிம்களின் பங்கு அளப்பெரியது என்றும் கூறியதோடு இனிவரும் காலங்களிலும் உலக அரங்கில் பிரேஸில் உயர்ந்து நிர்பதற்கு உரிய அனைத்து முயற்சிகளையும் செய்ய போவதாகவும் அறிவித்தனர்.
அன்றைய தினம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகளை பிரேசில் அரசே நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
தகவல் உதவி : மௌலவி செய்யது அலி ஃபைஜி


0 Comments