-எம்.எஸ்.முஸப்பிர்
நைனாமடம் வென்னப்புவ கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 17 மீனவர்களை கைதுசெய்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
நைனாமடம் முட்டுவ பிரதேசத்திலேயே திங்கட்கிழமை (18) இந்த மீனவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பாவிப்பதனால் பிரதேசத்தில் மீனவத் தொழிலுக்கு பாரிய அழிவு ஏற்படும் என்று ஒன்பது கடற்றொழில் சங்கங்களின் மீனவர்கள் சிலர், கடற்றொழில் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடற்றொழில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரமே இந்த மீனவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


0 Comments