கிறித்தவ நாடான பிரிட்டனில் கடந்த வாரம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் முதல் முறையாக 13 முஸ்லிம்கள் பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 8 முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்,
கடந்த தேர்தலில் 8 ஆக இருந்த முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்த தேர்தலில் 13 ஆக உயர்ந்துள்ளது.
அதிலும் குறிப்பாக 13 பாராளுமன்ற உறுப்பினர்களில் 8 பேர் பெண்களாவர்,
கிறித்தவ நாடான பிரிட்டனில் அதிகமான மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருவதையும் அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகமாக இஸ்லாத்திற்கு வருவதையும் நாம் முன்பே சில பதிவுகளில் வெளியிட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் வரலாற்றில் 13 முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
இதனால் பிரிட்டன் முஸ்லிம்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தகவல் உதவி : மௌலவி செய்யது அலி ஃபைஜி
முகநூல் முஸ்லிம் மீடியா


0 Comments