Subscribe Us

header ads

இப்படியும் நல்லவர்கள் வாழ்கிறார்கள் : ரூ.10 க்கு மருத்தவ சிகிச்சை....!!



10 ரூபாய்க்கு என்ன கிடைக்கும் ? ஒரு டீ, ஒரு பஜ்ஜி, ஒரு போண்டா போன்ற பொருட்கள் பெரு நகரங்களில் விற்கப்படுகிறது. 

ஆனால் தென்காசி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 10 ரூபாயில் தரமான மருத்துவ உதவியே கிடைத்து வருகிறது. 

5 நிமிடம் பார்க்கவே, 500 ரூபாய் வசூலிக்கும் மருத்துவர்களிடையே, சேவை மனப்பான்மையோடு, அனைத்து நோயாளிகளுக்கும் மனம் கோணாமல் சிகிச்சை அளிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ராமசாமி. 

இவரிடம் சென்றால், நோய் குணமாகிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. 

இஸ்லாத்தில் ராசி பார்ப்பது இல்லையென்றாலும் அப்பகுதி இந்து மக்களிடம் ராசியான மருத்துவர் என்ற பட்டப்பெயரையும் பெற்று வருகிறார்.

தென்காசி, வாய்க்காப்பாலம் அருகில் உள்ளது அவரது கிளினிக். 

தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் பணிபுரிந்த காலத்தில் இருந்து, சுமார் 32 வருடங்களாக, இதே இடத்தில்தான் மருத்துவம் பார்க்கிறார். ஒரு நாளைக்குச் சுமார் 50 முதல் 100 நோயாளிகள் வந்து கொண்டே இருக்கின்றனர். 

தொடர்ந்து வரும் நோயாளிகளை மிகுந்த சிரத்தையுடன் அணுகுகிறார்.

தென்காசியில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிய போது, 40 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் சரியாக யூகித்து, திருநெல்வெலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்.

ஊரில் பரவும் நோயை கட்டுப்படுத்துவதிலும், நோயாளியின் நோயை சரியாக யூகித்து, முறையான சிகிச்சைஅளிப்பது என ஒரு திறமையான மருத்துவராக மட்டுமில்லாமல் நோயாளியின் மனதை புரிந்து கொள்ளும் மன நல ஆலோசகராகவும் திகழ்கிறார். 

இந்தக் காலத்தில் 10 ரூபாய்க்கு மருத்துவம் எப்படிச் சாத்தியம் ? என்று கேட்டால்...

சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைசேன். 10 ரூபாயே அதிகம் தான். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன்.

நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும், அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன். 

ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். 

நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன். ரொம்பத் திருப்தியா சந்தோஷமா இருக்கேன் என்றார்.

இங்குள்ள பலராலும் சொல்லப்படும் கருத்து....

இவர் எங்க குடும்ப மருத்துவர். எங்க குடும்பத்துல யாருக்கு என்ன பிரச்னைன்னு வந்தாலும் உடனே, இவர்கிட்ட தான் ஓடிவருவோம். சட்டுன்னு சரியாயிடும். எங்க தென்காசி ஊர் ஜனங்க அத்தனை பேருக்குமே டாக்டர் ராமசாமிதான் குடும்ப டாக்டர் - மக்களின் மனதில் 67 வயது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் டாக்டர்.ராமசாமி.

தகவல் உதவி : விகடன்

Post a Comment

0 Comments