வளைகுடா நாடுகளில் அதிக அளவில் பயன்படுத்தும் குபூஸ்( kuboos) (அரெபியன் ரொட்டி) அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்த குபூஸ்
இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. அவர்கள் மட்டும் அல்ல வேலை சம்மந்தமான தங்கி உள்ள அனைத்து வெளிநாட்டினரும் இதை குறைந்தது ஒரு நேரம் சாப்பிட இதை பயன்படுத்துகின்றனர்
எல்லா வகையான சாண்ட் விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள்.
தேவையான பொருட்களில் முக்கியமான இரண்டு பொருள்கள் மைதா மற்றும் ஈஸ்ட்.
மக்களுக்கு தேவையினை பூர்த்தி செய்ய குறுகிய நேரத்தில் குபூஸ் தயாரிக்க மாவினை விரைவில் புளிக்க வைக்க ஈஸ்ட் அதிக அளவில் சேர்க்கின்றனர். அப்போது தான் மிருதுவாகவும், தயாரிக்கும் போது பொங்கி நல்ல அழகான வரும். மைதா மற்றும் ஈஸ்ட் அதிக அளவில் கலப்பதால் இதனை அதிக அளவில் சாப்பிடும் போது பசி அடங்கும். அதிக நேரத்திற்கு பசி எடுக்காதது ஆனால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும்
விரைவில் தொப்பை வரும்.சாதம் மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை விட குபூஸ் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும்.
இதில் மைதா மற்றும் ஈஸ்ட் அதிக அளவில் சேர்வதால் இது உடல் நலத்திற்கு தீங்கே. கோதுமையில் செய்ய குபூஸ் சிறிய அளவில் பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருக்கும்.
இதேபோல் தான் ரெஸ்க், பண், பிரட் போன்றவைகளிலும் மைதா & ஈஸ்ட் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.


0 Comments