Subscribe Us

header ads

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்குகிறார் சயீட் அஜ்மல்


சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் சயீட் அஜ்மல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சயீட் அஜ்மலின் பந்து வீச்சு விதிமுறைகளை மீறி இருப்பதாக கூறி, கடந்த கடந்த செப்டம்பர் மாதம் அவரது பந்து வீச்சுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஆய்வு மையத்தில் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி நடைபெற்ற பரிசோதனையில் அவரது பந்து வீச்சு முறை சரி என்று நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து உலகக்கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர், அவரது பந்துவீச்சை ஐ.சி.சி. அங்கீகரித்தது.

இதைத் தொடர்ந்து, வரும் 17ம் திகதி வங்கதேச சுற்றுப்பயணம் செல்லும் பாகிஸ்தான் அணியில் அவர் இணையவுள்ளார்.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் தெரிவு இன்று நடைபெறுகிறது. இதில் சயீட் அஜ்மல் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உமர் அக்மல், நசிர் ஜாம்ஷத் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மேலும், தொடக்க வீரர் அகமது ஷெஜாத் டி20 போட்டிக்கான அணியில் மட்டும் இடம்பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது.

Post a Comment

0 Comments