தேர்தல் முறைமை மாற்றம்
உள்ளிட்ட 20 திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றியதன் பின்னரே
பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின்
சந்திப்பிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியதாக ஊடகத்திற்கு கருத்து
வெளியிட்ட போது எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார்
இந்த வியடத்தை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி உறுதி
அளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேலும்
குறிப்பிட்டுள்ளார்


0 Comments