Subscribe Us

header ads

யெமன் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உதவத் தயார்- ஈரான்


சவுதி அரேபியா தலைமையில் 10 க்கும் மேற்பட்ட அரபு நாடுகள் கூட்டணி சேர்ந்து, யெமனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள், மற்றும் பதவி கவிழ்க்கப் பட்ட முன்னாள் யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிஹின் விசுவாசப் படைகளுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 26 ம் திகதி முதல் மேட்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் பொருட்டு சகல உதவிகளை தாம் வழங்க தாயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முஹம்மத் ஜவாத் ஸரீப் ஓமானிய வெளிவிவகார அமைச்சர் யூசுப் பின் அலவியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதே வேலை யெமனில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈரான் முன்வைத்துள்ள நான்கு நிபந்தனைகள் கொண்ட முன்முயற்சி திட்டத்தை யெமன் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பிராந்தியத்தில் ஈரான் மேலாதிக்கம் செலுத்த மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆயுதம் ஏந்தி போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான உதவி அளித்து வருவதாக யெமன் அரசு குற்றம் சுமத்தி வருகிறது. இதனை தெஹ்ரான் மறுத்து வருகிறது.

Post a Comment

0 Comments