-பாறுக் சிகான்-
ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நேற்று (05) யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் காலை 9 மணியளவில் நடைபெற்றது.
இதன் போது நிகழ்வை ஹிரா நிறுவன ஸ்தாபகத் தலைவர் எம்.ஏ சி அமீன் ஆரம்பித்து வைத்ததுடன் இவ் இலவச முகாம் பல தரப்பட்ட மக்கள் பலன் பெற வேண்டும் எனும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இவ்வைத்திய முகாமில் மாலை 5 மணிவரை சுமார் 250 க்கு மேற்பட்ட நோயாளர்கள் பயன்பெற்றுள்ளதுடன வைத்திய கலாநிதிகளான முஹமட் ரம்சி ,உவைஸ் மற்றும் கண்வைத்தியர் நௌசாத்,வைத்தியர் ஜெ; யகுமார்,வைத்தியர் தயாளினி உமாசுதன் ஆகியோர் பங்குபற்றி கண்,தோல்,உள்ளிட்ட இதர நோய்களுக்கு உடனடியான நிவாரணங்களை வழங்கினர்.
மேலும் ஹிரா நிறுவன அங்கத்தவர்களான எம்.ஆர் எம் ராபி,ஏ.கே.எம் தையூப்,கே.எம் நிலாம்,ஆர்.கே சுவர்ஹான் ,எம்.எஸ.எம் றிசாட்,பி அஸ்கர் ரூமி ஆகியோர் முகாமிற்கு வருகை தந்தவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முகாமிற்காக சுகாதார அமைச்சில் இருந்து அம்புலன்ஸ் வண்டி,மருந்தாளர்,தாதிய உத்தியோகத்தர்,சிற்றுழியர்கள் அனுப்பப்பட்டிருந்தனர்.இதற்காக ஹிரா கல்வி மறுமலர்ச்சி அமைப்பு சுகாதார அமைச்க்கு விசேட நன்றியை தெரிவிக்கின்றனர்.






















0 Comments