Subscribe Us

header ads

பிரதமருக்கும் எனக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்படுகின்றது!– திஸ்ஸ அத்தநாயக்க


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமக்கும் இடையில்ழ மிக நெருங்கிய பிணைப்பு காணப்பபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்த நாளுக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக நான் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

அது எனது கடமையாகவே கருதுகின்றேன்.
எனக்கும் அவருக்கும் இடையில்ழ மிக நெருங்கிய பிணைப்பு காணப்பட்டது.
அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சித்த போது யார் அதனை நிறுத்தினார்கள் என்பதனை எவரையும் விட பிரதமர் அறிவார்.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது என்ன விசேசம் என பிரதமர் என்னிடம் கேட்டார்.

பின்னொரு நேரத்தில் சந்திப்போம் என அவர் என்னிடம் கூறினார் என திஸ்ஸ அத்தநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments