-CM MEDIA-
2011 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியான பட்டதாரிகளுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என திருக்கோணமலை மாவட்ட பட்டதாரி யுவதிகள் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமதை அவரது திருகோணமலை காரியாலயத்தில் சந்தித்து தங்களின் முறைப்பாட்டினை முன்வைத்தனர்..
அவர்களுக்கான அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சரால் உறுதியளிக்கப்பட்டதுடன், விடுபட்டிருக்கின்ற அனைத்து பட்டதாரிகளுக்குமான நியமனம் வழங்கும் ஏற்பாட்டையும் தான் அவசரமாக சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ளவுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீரர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பிரத்தியேக செயலாளர் கே.பத்மநாதன் ஆகியோரும் கலந்து கொண்டார்.
0 Comments