பணத்தின் மீது ஆசை இல்லாத மனிதர்களே இல்லை
அனைவருக்கும் பணத்தின் மீது ஆசை இருக்கிறது
அனைவருக்கும் பணத்தின் தேவை இருக்கிறது
ஆனால் இஸ்லாம் அந்த ஆசைக்கும் அணை போடுகிறது
பணத்தை மனிதன் விரும்பலாம் அது அவனுக்கு உரியதாக இருக்க வேண்டும் அவன் உழைத்து உருவாக்கியதாக இருக்க வேண்டும் அனுமதிக்க பட்ட முறையில் அவனுக்கு அது கிடைப்பதாக இருக்க வேண்டும்
இதை விடுத்து அடுத்தவனின் பணத்தின்மீது ஆசை வைப்பதையும் அடுத்தவனுக்கு உரிய பணத்தை எடுத்து உண்ணுவதையும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது மறுமையில் தண்டனைக்கு உரிய குற்றம் என பிரகடனம் செய்கிறது
இந்த இஸ்லாமிய நடைமுறைக்கு விளக்கமாக பின்வரும் செயல் அமைகிறது
பிரிட்டனில் வாடகை கார் ஓட்டகுடியவர் முஹம்மது நிஸார்
இவரது வாகனத்தில் ஒரு வாடிக்கையாளர் 16 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு இணையான பிரிட்டன் பணத்தை விட்டு சென்று விடுகிறார்
அதை பார்த்த முஹம்மது நிஸார் தான் ஒரு முஸ்லிம் என்பதை எண்ணி பார்க்கிறார் முஸ்லிம் நம்பிக்கையின் மறு பதிப்பாக இருக்க வேண்டும்என்று இஸ்லாம் கூறும் அறிவுரையை எண்ணி பார்க்கிறார் அடுத்தவனின் பணத்தை உண்ணுவதால் மறுமையில் கிடைக்கும் தண்டனைக்கு அஞ்சுகிறார்
உடனே பணத்தை தவற விட்டவரின் முகவரியை தேடி வாகனத்தை செலுத்துகிறார் அவரை கண்டு பிடித்து இது உங்கள் பணம் என்று ஒப்படைக்கிறார்
தவற விட்டவர் மெய் சிலிர்த்து போகிறார் வாடகைக்கு வாகனம் ஓட்டும் இவரிடம் இவ்வளவு நாணயமா என எண்ணி மகிழ்கிறார்
அவரை பாராட்டுகிறார் பரிசுகளை வழங்க முன்வருகிறார் முஹம்மது நிஸார் பரிசை வாங்க மறுத்து தனது மார்க்க கடமையை செய்ததர்காக நான் உலகில் எந்த பரிசையும் வாங்க விரும்பவில்லை என் கூறிவிட்டு விடை பெற்று விடுகிறார்
இந்த காலத்தில் இப்படியும் ஒரு வாடகை கார் ஓட்டுனரா? என பணத்தை பெற்றவர் மெய் மறந்து நின்றார்.
நன்றி :மெளலவி சையது அலி பைஜி
0 Comments