Subscribe Us

header ads

ஏ.எல்.தவம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பெரும் பொக்குசமாகும் என்று கூறுகின்றார் - உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜுத்தீன்.

(எம்.எம்.ஜபீர்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் எமது கட்சியான சிறி லாங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பெரும் பொக்குசமாகும் என பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜுத்தீன் தெரிவித்தார்.

அம்பாறை லகுகல பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பொத்துவில் சோணகம கிராம மக்களின் 250 ஏக்கர் காணிகளை தங்களுக்கு வழங்குமாறு வேண்டி எமது நிலத்தை எமக்கு தா என்னும் தொனிப் பொருளிலான கூட்டம் கடந்த  பொத்துவில் பசேறிச்சேனை கிராமத்தில் நடைபெற்றது.

பொத்துவில் பள்ளியடிவட்டை விவசாய அமைப்பின் ஆலோசகர் என்.றிஸ்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.

இக் கூட்டத்தில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற் கண்டவாறு அவர் இங்கு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு படித்த புத்துஜீவிகள் பலர் உள்ளனர் அதே போன்றுதான் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தலைவர் செயலாளர் மத்தியில் எவ்வாறு செயற்படுகின்றார்கள் அதே போல் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்திக்காக நமது தவம் இரவு பகல் பாராது செயற்பட்டு வருவதைப் பாராட்டியாக வேண்டும்.சிறிய வயதாயினும் கல்வியில் அனுபவத்தில் திறனில் நுற்பமாக தீர்மானம் எடுத்து செயற்படும் தவம் போன்றவர்கள் கிழக்கின் அபிவிருத்திக்காக மத்திய அரசில் பதவிகள் வகிக்க இறைவனைப் பிராத்திக்கின்றேன்.

எங்களுக்கு சொந்தமான பூர்வீக காணியில் ஏன் நாங்கள் வாழ முடியாது.புதிய நல்லாட்சியின் மூலம் எங்களது உரிமையை நாங்கள் உரித்தாக்குவதற்கு ஏன் தயங்க வேண்டும்.எமது நிலத்தை எமக்கு தா என இக்கிராம பின்தங்கிய ஏழை விவசாய மக்கள் வேண்டுகின்றனர் சோணிக்கம கிராமம் 250 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட பாணமை மேற்கு கிராமப்பிரிவுக் குட்பட்டதாகும் பொத்துவில் பசறிச்சேனை மற்றும் உல்லை பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மூதாதயர்கள் அருகாமையில் உள்ள சோணிக்கம கிராமத்தில் தங்களுக்கு பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு பற்றைகளையும் சிறிய காடுகளையும் வெட்டி வாழ்வாதார நோங்கங்களுக்காக காணிகளை தெரிவு செய்து நிலத்தை பண்படுத்தி விவசாயம் மற்றும் சேனைப்பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இக்கிராமத்தில் ஒருசிலர் தற்காலிகமாகவும் ஒரு சிலர் நிரந்தரமாகவும் வாழ்ந்து வந்துள்ளதாக அறிய முடிகின்றது.பின்னர் 1981 ஆம் ஆண்டு இவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு குடியிருப்பு நிலமாக இதை வழங்கி இவர்கள் தொடர்ச்சியாக இங்கு அனைவரும் நிரந்தரமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பின்னர் 125 குடும்பங்களை உள்ளடக்கியதாக சோணிக்கம கிராமம் செயற்பட்டு வந்துள்ளன.இவர்களில் ஒரு சிலருக்கு இக்கிராமத்தில் வாழ்வதற்கு லகுகல பிரதேச செயலகத்தினால் காணிகளுக்கான அனுமதிப் பத்திரம் பேமீட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.தொடர்ந்தும் வாழ்ந்து வந்த இக்கிராம மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தங்களது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பின் நிமிர்த்தம் மக்கள் இப் பிரதேசங்களில் இருந்து வெளியேறி இக்கிராமத்திற்கு அருகாமையில் உள்ள பசேறிச்சேனை மற்றும் உல்லை பிரதேசங்களில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

கடந்த அரசாங்கத்தில் பலமுறை பல்வேறுபட்ட முயற்ச்சிகளை மேற்கொண்டும் முறைப்பாடுகளுக்கு பதில் கடிதங்கள் கிடைத்ததே தவிர எந்த விதமான நன்மைகளும் கிடைக்கவில்லை.இக்கிராம மக்கள் தங்களது இடங்களை சென்று வாழ்வதற்கு அனுமதியினை பெற்றுத் தரவேண்டும். 1971 முதல் சோணிக்கம கிராமம் பொத்துவில் பிரதேச எல்லைக்குள் இருந்துள்ளது.பின்னர் 1971 பிறகு உதவி அரசாங்க காரியாலம் அமைப்பு பெற்றதன் பின்னர் இக்கிராமம் லகுகல பிரதேச எல்லைக்குள் உள்வாங்கப்பட்டதன் காரணமாக பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் இடைவெளிகள் காணப்பட்டன.எது எப்படி இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இது விடயமாக நாங்கள் பல முயற்ச்சிகளை செய்து வருகின்றோம். இவர்களுக்கு உரிய தீர்வுகள் விரைவில் கிடைக்கவுள்ளது.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவத்தின் உதவியுடன் நாம் அனைவரும் சேர்ந்து நமது நிலங்களை மீட்க நடவடிக்கைகளை மேற் கொள்வோம் என தாஜுத்தீன் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விரிவுரையாளர் எம்.எச்.முனாஸ்,அதிபர் ஏ.எல்.யாசீன், ஆசிரியர் எம்.ஹாறூன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








Post a Comment

0 Comments