Subscribe Us

header ads

நேபாள மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வாருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்.
கடந்த இரு நாட்களாக நேபாளம், கட்மண்டூரில் ஏற்பட்ட திடீர் பூமியதிர்ச்சியால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமானவரையில் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வாருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
குறித்த பூகம்பத்தினால்; இதுவரை மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கனக்கானோர் தமது இருப்பிடங்களை இழந்து நிர்கதியாகியுள்ளதாகவும் உணவு மற்றும் மருத்துவ வசதிகளை  பெற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே பாதிக்கப்பட்ட இம்மக்களுக்காக அனைவரும்  தம்மாலான பங்களிப்புகளை வழங்க முன்வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக்கொள்கின்றது.
ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடாக தமது உதவிகளை வழங்க முன்வருவோர் பின்வரும் கணக்கிலக்கத்தில் தங்களது உதவித் தொகைகளை வைப்புச் செய்யுமாறும் மேலதிக விபரங்களுக்கு அதனது சமூக சேவைக் குழு செயலாளர் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அவர்களை 077 3575742 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.

All Ceylon Jamiyyathul Ulama
A/C Number                : 1320006768
Bank                           : Commercial Bank
Branch                       : Maradana

வஸ்ஸலாம். இவ்வண்ணம்
அஷ்-ஷைக் ஏ.எல். முஹம்மத் கலீல்
கௌரவப் பொருளாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,

Post a Comment

0 Comments