Subscribe Us

header ads

அலுத்துப்போயிருக்கும் ஞானசாரவுக்கு நீதிமன்றில் சூடான பதில்!


அல்குர்ஆன் நிந்தனை வழக்கில் இன்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜராகியிருந்த பயங்கரவாதி ஞானசார, தன்னை ஏன்தான் இவ்வாறு (பல வழக்குகள்) அலைக்கழிக்கிறார்களோ தெரியவில்லை, தனக்குக் காரணம் புரியவில்லையென தெரிவித்ததற்குப் பதிலளித்த சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, பொது பல சேனா எனும் அமைப்பு நாட்டை அச்சுறுத்துவதையும், சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதையும் நிறுத்தினால் இவ்வாறு நீதிமன்றம் ஏறி இறங்கத் தேவையில்லையென பதிலளித்துள்ளார்.
இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் இயங்கிவரும் சர்வதேச தர பயங்கரவாதியான ஞானசாரவுக்கு எதிராக மொத்தம் 65க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் நிலுவையில் இருக்கும் நிலையில் ஏற்கனவே நான்கு வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஞானசாரவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைப் பணிகளில் தொடர்ச்சியான முன் நின்று உழைக்கும் சட்டத்தரணி ஷிராஸ் நூர்டீனிடம் இது பற்றி வினவிய போது, இன்றைய வழக்குக்கு வந்திருந்த ஞானசார தனக்கு சுகயீனம் (காய்ச்சல்) என மன்றில் தெரிவித்து தவணையைப் பின் போடக் கேட்க முனைந்த போது அதற்கான மருத்துவ சான்றிதழ் இல்லாமல் அனுமதியளிக்கக் கூடாது என வாதிக்கப்பட்டதன் விளைவில் தன்னை ஏன் இவ்வாறு அச்சுறுத்தி அலைக்கழிக்கிறார்களோ தெரியவில்லையென தெரிவித்துள்ளார் ஞானசார. இதற்குப் பதிலளிக்கையிலேயே உங்கள் அமைப்பான பொது பல சேனா நாட்டுக்கும், சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தல் விடுப்பதை நிறுத்தினால் அனைத்தும் நின்று விடும் என பதிலளிக்கப்பட்டுள்ளது.
அளுத்கம வன்முறையைத் தூண்டிய ஞானசாரவுக்கு எதிராக இதுவரை 52 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அவை தொடர்பான விவகாரங்கள் நிலுவையில் இருக்கின்ற அதேவேளை கடந்த வாரம் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் பொது பல சேனாவினால் தூண்டி உருவாக்கப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடி ஏந்தப்பட்டதற்கெதிரான முறைப்பாட்டில் பொலிசார் ‘பி’ ரிப்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கான விசாரணைகளும் விரைவில் இடம்பெறுவதோடு அதற்குத் தண்டனையாக இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டணை கோரி வாதாடவிருப்பதாகவும் சட்டத்தரணி ஷிராஸ் நூர்டீன் விளக்கியிருந்தார்.
வட்டரக்க விஜித தேரர் தொடர்பான வழக்கில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மைத்ரி குணரத்ன மற்றும் ஷிராஸ் நூர்டீரை கெட்ட வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய வழக்கு விசாரணையுட்பட மேலும் நான்கு வழக்குள் மற்றும் இதுவரை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாத முறைப்பாடுகள் என அறுபதுக்கும் மேற்பட்ட சட்டச் சிக்கல்களை ஞானசார சந்திக்கவிருக்கும் நிலையிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு தற்போது நீதிமன்றம் ஏறி இறங்கி அலுத்துப் போயிருக்கும் பயங்கரவாதி ஞானசார ஒரு சில முறைப்பாடுகளின் தனிப்பட்ட ரீதியில் மன்னிப்புக் கேட்க முயன்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கின் விசாரணை ஜுன் மாதம் 15ம் திகதி தொடரவுள்ளது.

Post a Comment

0 Comments