Subscribe Us

header ads

இந்திய ஜோதிடரின் ஆலோசனைகளை நாடும் மஹிந்த


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தற்போது, இந்திய ஜோதிடர்களின் ஆலோசனைகளை நாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிரியவில் அமைந்துள்ள பீகொக் மாளிகையில் குடியேறுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

இதனை முன்னிட்டு குறித்த மாளிகையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாற்றங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின்,  புதிய இந்திய ஜோதிட ஆலோசகரின் கட்டளைகளே பின்பற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமனதாச என்ற உள்நாட்டு ஜோதிடரின் ஆலோசனைக்கு அமையவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்கூட்டியே தேர்தலை நடத்தி தோல்வியடைந்தார் எனக் குறிப்பிடப்படுகிறது.

பிரபல வர்த்தகர் ஏ.எஸ்.பி லியனகே என்பவரினால் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பீகொக் மாளிகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments