Subscribe Us

header ads

பேஸ்புக்கில் உங்கள் பேஜ்க்கு அதிக லைக்ஸ் வேண்டுமா..?


இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பலரும், தங்களக்கென தனி பக்கமாக உருவாக்கி கொள்கின்றனர். சிலர் அந்த பக்கத்தை வியாபர ரீதியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பேஸ்புக் பேஜ் நடத்துபவர்கள் தங்களது பேஜ்க்கு அதிக லைக்ஸ் எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம்..

1. உங்களது மின்னஞ்சலில் இருக்கும் கான்டாக்ட்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.

2.பேஸ்புக்கில் இருக்கும் உங்களது நட்பு வட்டாரங்களை லைக் செய்ய அழைக்கலாம்.

3.அவ்வப்போது சிறிய போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கலாம்.

4.நீங்கள் பணியாற்றும் தகவலை பேஸ்புக்கில் குறிப்பிடும் போது அங்கு உங்களின் பேஸ்புக் பக்கத்தில் பணியாற்றுவதாக குறிப்பிடுங்கள்.

5.உங்களது தகவல்களை மற்றவர்கள் படிக்கும் முன் உங்களது பக்கத்திற்கு லைக் செய்யும் படி செய்யலாம்.

6.நீங்கள் நடத்தும் பேஜ் சம்பந்தப்பட்ட மற்ற பேஸ்புக் பேஜ்களுக்கும் நீங்கள் லைக் செய்யலாம்.

7.உங்களது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தகவல்களை கொடுத்தால் தானாக லைக்ஸ் அதிகரிக்கும்.

8.மக்களை உங்களது பேஜ்க்கு லைக் செய்ய அழைக்க வேண்டும், ஒவ்வொரு இடத்திலும் உங்களது பேஸ்புக் பக்கத்தை லின்க் செய்ய வேண்டும்.

9.32665 என்ற எண்ணுக்கு "facebook.com/yourusername" குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

10.லைக் பாக்ஸ் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் லைக்ஸ்களை பெற முடியும்.

11.நீங்கள் பதிவு செய்யும் ஸ்டேட்டஸ்களில் அதிகமாக @ பயன்படுத்துங்கள்.

12.நீங்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் சிறப்பாக இருந்தால் தானாக அதிக லைக்ஸ்களை பெற முடியும்.

13.பேஸ்புக்கில் அதிக லைக்ஸ்களை பணம் செலுத்தி வாங்க முடியும்.

14.உங்களது பேஸ்புக் பக்கத்தினை டுவிட்டருடன் இணைத்து கொள்ளலாம்.

15.வாடிக்கையாளர்களுக்கு உங்களது பேஸ்புக் பக்கத்தில் போட்டோக்களை டேக் செய்ய அனுமதியுங்கள்.

16.அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் ஆப்ஷனை வழங்குதல் நல்ல பலனை தரும்.

17.பேஸ்புக் இல்லாமல் மற்ற சேவைகளை பயன்படுத்தியும் விளம்பரம் செய்யலாம்.

18.மின்னஞ்சல் மூலம் விளம்பரம் செய்யும் போது உங்களது பேஸ்புக் பக்கம் குறித்த தகவல்களையும் அங்கு குறிப்பிடலாம்.

19.மற்ற பேஸ்புக் பக்கங்களில் இருக்கும் தகவல்களில் உங்களது பக்கத்தினை கமென்ட் பகுதியில் குறிப்பிடலாம்.

Post a Comment

0 Comments