மின் சக்தியில் இயங்கும் வாகனங்களின் மின்கலங்களுக்கு மின் ஏற்றும் நிலையம் ஒன்று கொழும்பில் முதன்முறையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள 100 வீதமான வாகனங்கள் எரிபொருள் மூலம் இயங்குபவை.
2020ம் ஆண்டில் மின்சாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மின்னை ஏற்றும் நிலையம் முதன்முறையாக கொழும்பு டிக்கல் வீதியில் திறக்கப்பட்டுள்ளதுடன், அதனை மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று திறந்து வைத்துள்ளார்.
0 Comments