அபு அலா –
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திட்குட்பட்ட 32 கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள இளைஞர் கழக உறுப்பினர்களுக்கான புதிய நிருவாகத் தெரிவு அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் விளையாட்டுக் கழக சம்மேளன தலைவர் யூ.எல்.முஹம்மட் சபீர் தலைமையில் இன்று புதன்கிழமை மாலை (08) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி யூ.எல்.மஜீட், அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றசீன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிருவாகத்தினர் தெரிவில் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிருவாத்தினர் பின்வருமாறு,
தலைவர் - இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமாகிய யூ.எல்.முஹம்மட் சபீர்.
பொருளாளர் – எம்.எஸ்.ஜெனீஸ்
அமைப்பாளர் – ஜே.பஸ்மிர்
உப தலைவர் – ஏ.எல்.ஹனான் அஹமட்
உப செயலாளர் – எம்.சாஜீத்
உப அமைப்பாளர் – எம்.ஏ.எல்.எம்.றிப்கான்
கணக்குப் பரிசோதகர் – ஆர்.எம்.முபாரீஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
0 Comments