பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணனிகள் வழங்கப்படும் எனவும் முதல் கட்டமாக தான் கல்வி கற்ற கொழும்பு றோயல் கல்லூரிக்கு ஆயிரம் டெப் கணனிகள் வழங்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
றோயல் கல்லூரியில் நேற்று புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பாடசாலைகளுக்குள் கணனிகள் பயன்படுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் டி.எஸ். சேனாநாயக்க மற்றும் ஆனந்த கல்லூரிகளுக்கு அடுத்த கட்டமாக ஆயிரம் டெப் கணனிகள் வழங்கப்படும்.
இலங்கையின் கல்வியை, வளர்ந்து வரும் ஏனைய நாடுகளை போல் எதிர்காலத்தில் மாற்ற வேண்டும். இதற்காக கணனி பயன்பாட்டை மாத்திரமல்லாமல், புதிய தொழிற்நுட்பத்தையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் என்று வரையறை செய்துள்ளன.
எமது நாட்டில் ஒரு வகுப்பில் குறைந்தது 35 மாணவர்கள் என்றாவது வரையறை செய்ய வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments