Subscribe Us

header ads

குட்டு வெளிப்பட்டு விடுமோ எனும் பயத்தில் போராடும் உறுப்பினர்கள்: ரணில் கேலி...


கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை புதிய அரசாஙகம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதினால் எங்கே தாமும் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் எதிர்கட்சியினர் இன்று பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மோசடிகாரர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்ற போதிலும் எதிர்கட்சிக்கு இன்னும் அவசியமாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற போது அமைச்சர் பதவி கேட்டுக்கொண்டு வந்து தமக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை எனும் ஆதங்கத்திலேயே இன்று பாராளுமன்றத்தில் கூச்சலிட்டு வருகிறார்கள் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முதல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments