Subscribe Us

header ads

அனுரவின் அழைப்பை நிராகரித்து மௌலானாவின் அழைப்பை ஏற்ற மகிந்த


தமது மேதின பேரணியில் கலந்து கொள்ளுமாறு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளுனர் அலவி மௌலானா உட்பட குழுவினர் இவ் அழைப்பினை விடுத்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஏற்கனவே மகிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனுர பிரியதர்ஷன யாப்பாவினால் விடுக்கப்பட்ட அவ் அழைப்பை நிராகரித்து குறித்த பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க குறித்த தொழிற்சங்க உறுப்பினர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments