Subscribe Us

header ads

மகிந்தவுக்கு ஆதரவாக பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்று வட்ட பாதையில் தற்பொழுது ஆயிரகணக்கான பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதினால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாராளுமன்றத்தினுள் 100ற்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றனர்.
சபாநாயகர் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த கூட்டத்தினையும் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.




Post a Comment

0 Comments