'உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா... உங்களது உணவில் புரதம் இருக்கிறதா... இதை சாப்பிட்டால், உங்கள் உடல் எடை கூடும்... இதை சாப்பிட்டால் நீங்கள் மூன்றே வாரத்தில் உடல் இளைத்து கட்டுடல் பெறுவீர்கள்' என்பது போன்ற விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். இப்படி, ஆரோக்கியத்தை மையப்படுத்தி வெளிவரும் விளம்பரங்களை பார்த்து வாங்குபவர்கள் ஒருபுறம் என்றால், நோய்களுக்கு வித்திடும் உணவில் கலப்படத்தை செய்து, மனிதர்களை நோயாளிகளாக வலம் வரச் செய்பவர்கள் மறுபுறம்.
முன்பெல்லாம், பொருளின் அளவை அதிகரிக்க பாதிப்புகள் குறைவான பொருட்களை வைத்து உணவு கலப்படம் செய்து வந்தனர். உதாரணத்துக்கு... பாலில் தண்ணீர் சேர்ப்பது, காபி பொடியில் புளியங் கொட்டையை அரைத்து சேர்ப்பது என உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சில பொருட்களை சேர்ப்பார்கள்.
ஆனால், இன்றோ பெரிய நிறுவனங்கள் கூட தங்களது பொருட்களின் தரத்துக்காக, உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் பொருட்களை சேர்க்கின்றனர். சாக்லெட்டில் தொடங்கி ஆயத்த உணவுகள் வரை கலப்படம் தொடர்கிறது. இதுவே ஆபத்துக்கான ஆரம்பம்.
பெரும்பாலான சாக்லெட்களில் மாட்டு கொழுப்பின் சாறு சேர்க்கப்படுகிறது. விரைவில் அழகாகி விடலாம் என்பது போன்ற ஃபேஸ் கிரீமில் பன்றிகளின் கொழுப்பும், எண்ணெயும் சேர்க்கப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் விற்க தடை செய்த குளிர்பானங்கள், இந்தியா முழுவதும் விற்கப்படுகின்றன. இதில், உயிரை கொல்லும் 40-க்கும் மேற்பட்ட வீரியமுள்ள கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பீட்சா என்ற துரித உணவு, வெளிநாட்டு உணவகங்களின் பெயரில் இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. அதில், அதிக சுவை மிகுந்த சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. இது நம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி பல நோய்களுக்கு வழியாக அமைந்துவிடுகிறது.
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள் E என்ற எழுத்துடன் எண்களும் பிரிண்டாகி இருக்கின்றன. இந்த எண்கள் கெமிக்கல்கள் கலந்திருப்பதை குறியீடாக கொண்டு பிரிண்ட் செய்யப்படுகிறது. இதில் சில வீரியமுள்ளவை, சில வீரியம் இல்லாதவை.
ஆனால், இது நமக்கு தேவையா என்பதில்தான் விடை இருக்கிறது. இந்த ரசாயனங்கள், உணவு கெட்டு போகாமல் இருக்கக் கலக்கப்படுகின்றன. ஆனால், அதை சாப்பிடும் நமக்கு உடல் உபாதைகள் வருவது நிச்சயம்.
முன்பு, பால் பசு மாடுகளிடமிருந்து கறக்கப்பட்டது. இன்று தொழிற்சாலைகளில் பால் தயாரிக்கப்படுகிறது. 'ஸ்கிம்மிடு மில்க்' என்று சொல்லக் கூடிய பாக்கெட்டில் அடைத்து விற்கும் விலை அதிகமான பாலில் க்ளுகோஸ் கலக்கப்படுகிறது. இதிலும், காஸ்டிக் சோடா, சோப்பு தூள், பூச்சிக் கொல்லிகள், உலோகங்கள் என கலவைகளை கலந்து பால் தயாரித்தும் விற்கின்றனர்.
இரண்டு நிமிட நூடுல்ஸ் செரிக்க இரண்டு நாளாகும். அதில் சேர்க்கப்பட்ட மெழுகு, உடலில் சென்று நம் வயிற்றை ரணமாக்கிவிடும். உணவை செரிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 48 மணி நேரம். இதில் கலக்கப்படும் சோடியமோ மிக அதிகம்.
குழந்தைகள் குடிக்கும் அனைத்து ஊட்டச்சத்து பானங்களும், டெல்லியில் பரிசோதனை செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. வேர்க்கடலையிலிருந்து எடுக்கப்பட்ட தேவையில்லாத, விலங்குகளுக்கு தருகின்ற 'சக்கை' சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேவையில்லாத பொருட்களே ஒவ்வொரு பெயரில் புது புது பாட்டிலில் அடைத்து விற்கப்படுகின்றன.
நம்மில் பலருக்கு டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. நமக்கு கிடைக்கும் டீ தூள்கள் மூன்றாம் ரகம்தான். இந்த டீ தூள்களில் இரும்பின் தேவையில்லாத கழிவுகள் சேர்க்கப்படுகின்றன. இது பிராண்ட் டீ பாக்கெட்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெயில் தரமில்லாத எண்ணெய்கள் கலக்கப்படுகின்றன. அரசாங்கத்தால் அனுமதிக்கப்படாத ஃபுட் கலர்கள், மஞ்சள் தூள், தனியா தூளில் சேர்க்கப்படுகின்றன. மிளகாய் தூளில் சூடான் டை சேர்க்கப்படுகிறது. இப்படி பல கலப்படங்கள் நம் உணவுகளில் நடந்திட நாம் அதை தினமும் பயன்படுத்துகிறோம் என்பதுதான் வேதனை.
தடுக்கும் முறை...
சமையலுக்கு தேவைப்படுகிற அனைத்து பொருட்களையும் வாங்கி, நாமே சொந்தமாக அரைத்து பயன்படுத்தலாம். கடையில் விற்கப்படும் ஆயத்த உணவுகளை வாங்காமல் தவிர்க்கலாம். வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை பயன்படுத்தலாம். சுகாதாரமான முறையில் செய்து சாப்பிட்டுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. சோப்பு மற்றும் இதர காஸ்மெடிக் பொருட்கள் அதிக கெமிக்கல் இல்லாததும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதாக தேர்ந்தெடுக்கலாம். டீ, காபி சாப்பிடுகிற பழக்கத்தை கைவிடுவது நல்லது. நம் ஊரில் நம் அருகில் விளையும், கிடைக்கும் இயற்கை உணவுகளையே பிரதான உணவாக மாற்றிக் கொள்வது உடலுக்கு நன்மையை அளிக்கும்.
0 Comments