ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மோதல் சம்வமொன்றில் காயமடைந்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நீச்சல் தடாக உணவகத்தில் நேற்று பிற்பகலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சருக்கும் உறவின சகோதரர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கை கலப்பில் இருவரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் சித்தப்பாவின் மகனான ஒன்றி மஹில் பெர்னாண்டோவிற்கும் முதலமைச்சருக்கும் இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசியல் காரணிகளின் அடிப்படையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஒன்றி மஹில் பெர்னாண்டோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பிரதமருக்கும் ஜனாதிபதிக்கு கெட்ட வார்த்தைகளினால் மஹில் திட்டியதாகவும் இதனால் தாமும் அவரை திட்டியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மஹில் என்னை திட்டினார் நானும் திட்டினேன். என்னைத் தள்ளிவிட்டார். நானும் தள்ளிவிட்டேன்.
எனக்கு ஓர் அடி பட்டது. அவ்வளவுதான் என ஹரின் பெர்னாண்டோ ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

0 Comments