உங்களது ஸ்மார்ட்போனில் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பூட்டிய கதவை திறக்க முடியும். ஆகஸ்டு என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த பூட்டானது ரெஜிஸ்டர் செய்த பின் அப்ளிகேஷனின் உதவியோடு பூட்டிய கதவை திறக்க வழி வகுக்கின்றது.
உங்களது நண்பர்கள், உறவினர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அவர்களுக்கான குறியீட்டை கொடுத்தால் அவர்களும் வீட்டினுள் நுழைய முடியும். இந்த குறியீடு குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து விடும்.
இந்த ஆகஸ்டு பூட்டின் விலை $250 மற்றும் அதை இன்ஸ்டால் செய்ய $250 டாலர்கள் வரை செலவாகும். கேட்க வித்தியாசமாக இருந்தாலும் பாதுகாப்பு வல்லுனர்கள் இந்த செயலிக்கு அதிக வரவேற்பு அளிக்கவில்லை என்று தான் கூற வேண்டும், ஏனெனில் ஸ்மார்ட்போன்கள் தப்பி தவறி வேறு யாரிடமாவது கிடைத்தாலோ அல்லது தொலைந்து போனாலோ சொந்த வீட்டையே இழக்க நேரிடும்.


0 Comments