பிரபல ஆடவர்க்கான நவநாகரிக ஆடை வடிவமைப்பில் முன்னோடியான ஹமீடியா
நிறுவனத்தின் கிரிபத்கொடை கிளைக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.
நாடாளாவிய ரீதியில் பல கிளைகளை கொண்டு இயங்கும் முஸ்லிம் வர்த்தகர்
ஒருவருக்கு சொந்தமான ஹமீடியா நிறுவனத்தின் புதிய கிளை ஒன்று நேற்று காலை
கிரிபத்கொடை , மாக்கொல வீதியிலுள்ள உதேஷி சிட்டியில் உத்தியோகபூர்வமாக
திறந்துவைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவைத் தொடந்து குறித்த காட்சியறைக்கு முன்பாக
ஒன்றுகூடிய குழுவொன்றே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. பின்னர்
பொலிஸாரின் உதவியுடன் ஆர்ப்பாட்டம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கடந்த பல வருடங்களாக கிரிபத்கொடை நகரில் சிறுபான்மையினருக்கு வர்த்தகம்
மேற்கொள்ள இடமளிக்கப்படாத நிலையில் ஹமீடியா நிறுவனத்தின் கிளை நேற்று
திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 Comments