Subscribe Us

header ads

திசர பெரேராவுக்கு பெய்லி, `பாண்டா’ என பட்டப்பெயர் வைத்துள்ளார்.

பஞ்சாப் அணியில் விளையாடி வரும் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேராவுக்கு, அணித்தலைவர் பெய்லி, `பாண்டா’ என பட்டப்பெயர் வைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பெய்லியும், இலங்கை அணி வீரர் திசர பெரேராவும் முன்பு சென்னை அணியில் விளையாடினர். தற்போது இருவரும் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகின்றனர்.
திசர பெரேரா போட்டியின் போதும், பயிற்சியின் போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். இதனால் பெய்லி அவரை `பாண்டா’ என பட்டபெயர் வைத்து அழைப்பார்.
இது தொடர்பாக பெரேரா கூறுகையில், நானும், பெய்லியும் முதலில் சென்னை அணியில் இருந்தோம். அப்போது நான் சற்று பருமனாக இருந்தேன். இருப்பினும், வேகமாக பவுலிங் செய்வேன்.
இதனால், பெய்லி என்னை ‘குயிக் லிட்டில் பாண்டா’ என்று அழைக்கத் தொடங்கினார். இப்போது பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், பெய்லி எனது அணித்தலைவராகி (பஞ்சாப்) விட்டார். இதனால், அவர் என்னை அப்படி அழைப்பதை தவிர்க்க முடியவில்லை.
தவிர, வீரர் என்ற முறையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்களும் இப்படி சிரித்துக் கொண்டிருந்தால், எவ்விதமான நெருக்கடியும் குறைந்து விடும் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments