புத்தளம் வண்ணாத்திவில்லு இசுறு பாடசாலையின் பெண் பிரதி அதிபரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அப்பாடசாலையின் அதிபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதிமன்ற நீதிபதி பாரதி விஜேரத்ன உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பாடசாலையினுள் வைத்து இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து குறித்த அதிபர் வண்ணாத்திவில்லு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோதே அவரை இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடசாலையின் கோவை ஒன்று தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கும் பெண் பிரதி அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.
இந்நிலையில் தன்னைத் தாக்கியதாக தாக்குதலுக்குள்ளான பெண் பிரதி அதிபர் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டையடுத்தே குறித்த அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தாக்குதலுக்குள்ளான பெண் பிரதி அதிபர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments