8 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான போட்டி அட்டவணை தரப்பட்டுள்ளது.
8ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று முதல் மே 24ஆம் திகதி வரை 47 நாட்கள் இந்தியாவில் உள்ள 12 நகரங்களில் இடம்பெறவுள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அதிரடி ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் மனதை ஆட்டிப் படைக்கவிருக்கும் வித்தியாசமான ஐ.பி.எல். திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸூம் மும்பை இந்தியன்ஸூம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோதுகின்றன.
போட்டிக்கு ஒரு நாளுக்கு முன்பாக நேற்று கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழா அரங்கேறியது.
இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான தொடக்க விழாவில் பிரபலங்களின் கண்கவர் நடனம், கலை நிகழ்ச்சி, லேசர் ஒளி வெள்ளத்தில் இன்னிசை விருந்து என்று மொத்தம் 2 மணி நேரம் மைதானம் குதூகலத்தில் மிதந்தது.
போட்டி அட்டவணை விபரம் வருமாறு ;
0 Comments