பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகிப்பவர், நீதியரசர் எம்.ஜெயபால்(60). தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் சண்டிகரில் உள்ள சுக்னா ஏரிக்கரை ஓரம் கடந்த 30-ம் தேதி காலை தனது பாதுகாப்பு அதிகாரியுடன் இவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது, சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி ஏரி நீரில் மூழ்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்ட நீதிபதி சற்றும் தாமதிக்காமல் ஏரிக்குள் பாய்ந்து, நீந்திச்சென்று, அந்த சிறுமியை காப்பாற்றி, கரைக்கு கொண்டுவந்து சேர்த்தார்.
அவரது பாதுகாப்பு அதிகாரியான யஷ்பால் என்பவரும் நீதிபதியுடன் தண்ணீரில் குதித்து அந்த சிறுமியை காப்பாற்றுவதற்கு உதவி புரிந்தார்.


0 Comments