Subscribe Us

header ads

கல்பிட்டியில் உள்ள 11 தீவுகளுக்கு, விலைமனுகோர அரசாங்கம் தீர்மானம்


கல்பிட்டி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்பிட்டியில் உள்ள 11 தீவுகளுக்கு புதிதாக விலைமனு கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்பிட்டி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தீவுகள் 30-99 வருடங்கள் குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 

குறித்த பகுதியில் உள்ள 14 தீவுகளில் மூன்று தீவுகள் ஏற்கனவே முதலீட்டார்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய தீவுகளுக்கு புதிய விலைமனு கோரப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மில்ராஜ் கிரியெல்ல தெரிவித்தார்.

Post a Comment

0 Comments