Subscribe Us

header ads

கல்விமான் ஜெமீலின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு மாத்திரமன்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கு பாரிய இழப்பாகும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


மர்ஹூம் ஜெமிலின் மறைவு குறித்து முதலமைச்சர் விடுத்த அனுதாச் செய்தியில்:

கல்விமான் ஜெமீல் வெறுமனே ஒரு இலக்கிய வாதியாகவோ அல்லது எழுத்தாளராகவோ பரிநாமித்தவர் அல்லர். தமிழ் முஸ்லிம் மக்களின் இணைப்புப் பாலமாக தன்னை புடம்போட்டுக் கொண்டு எழுத்துப்பணியில் ஈடுபட்டவர். ஆய்வுத்துறையில் சிறந்து விளங்கியவர், சிறந்த ஆசிரியராக, சிறந்த எழுத்தாளராக, சிறந்த நிருவாகியாக இருந்து  மக்கள் பணியாற்றியவர். நல்லம் மனித நேயம் கொண்டவர்.

ஏழை முதல் பணக்காறர் வரை எல்லோரையும் சமமாக நேசித்தவர்
அவரை எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும் மிகவும் கனிவான குரலில் பேசக்கூடியவர். எந்த சந்தர்ப்பத்திலும் கோபம் கொள்ளாதவர். பல்வேறு காத்திரமான நூல்களை ஆக்கியவர் வாழும்போதே கலைஞர்களையும், எழுத்தாளர்க்ளையும் கெளரவிக்கும் திட்டத்துக்கு உறுதுணையாக இருந்து திறமைமிக்கவர்களை பாராட்டியவர்.

முஸ்லிம் அரசியல் ரீதியான ஆழமான பார்வையே அவர் எப்போதும் கொண்டிருந்ததுடன் அது தொடர்பிலான பல்வேறு நூல்களையும் ஆக்கியுள்ளார்.

அன்னாரின் மறைவு இலங்கை கல்வித்துறைக்கு மட்டுமல்லாது கிழக்கு மாகாண மக்களுக்கும் குறிப்பாக அன்னாரின் மாவட்டமான அம்பாரை மக்களுக்கும் பெரும் பேரிழப்பாகும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Chief Minister Media Secretary

Post a Comment

0 Comments