Subscribe Us

header ads

நாமலின் மெய்ப்பாதுகாவலரிடம் இருந்தது கைத் துப்பாக்கியே: பொலிஸார்...


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்பாதுகாவலரிடம் இருந்தது கைத் துப்பாக்கியே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஹம்பாந்தோட்டை ஹங்குனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கைத்துப்பாக்கியுடன் கூட்டம் நடைபெற்ற பிரதேசத்தில் பிரவேசித்ததாக நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், தமது மெய்ப்பாதுகாவலரிடம் தண்ணீர் போத்தல் ஒன்று மட்டுமே இருந்தது எனவும் கைத்துப்பாக்கி எதனையும் எடுத்துச் செல்லவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இராணுவ கோப்ரலான குறித்த மெய்ப்பாதுகாவலரிடம் கைத்துப்பாக்கி இருந்தமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக யார் நியமித்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments